< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
பிரான்ஸ்: அடுக்குமாடி குடியிருப்பில் வெடிவிபத்து - 3 பேர் பலி
|8 April 2024 7:13 AM IST
பிரான்சில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
பாரிஸ்,
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே லெவன்த் அரொன்சிண்ட்மெண்ட் பகுதியில் 8 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் பலர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 7வது தளத்தில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. வெடிவிபத்தை தொடர்ந்து குடியிருப்பில் தீ பற்றியது. தீ மளமளவென பரவியது.
இந்த தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார், தீயணைப்பு மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமையல் எரிவாயு கசிவு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டு தீ பற்றியிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.