< Back
உலக செய்திகள்
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் உயிரிழப்பு
உலக செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் உயிரிழப்பு

தினத்தந்தி
|
22 Jun 2024 11:38 AM IST

ஆர்கன்சாஸின் நியூ எடின்பர்க் பகுதியைச் சேர்ந்த 44 வயதான டிராவிஸ் யூஜின் போஸி என போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள மளிகைக்கடையில் பொருட்கள் வாங்கி கொண்டிருந்த மக்கள் மீது 44 வயதான நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில், 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்

ஆர்கன்சாஸின் நியூ எடின்பர்க் பகுதியைச் சேர்ந்த 44 வயதான டிராவிஸ் யூஜின் போஸி என போலீசார் விசாரணையில் தெரியவந்தது. போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய யூஜின் போஸியும் காயம் அடைந்தார். அவரை கைது செய்த போலீசார் கொலை வழக்கு உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்