< Back
உலக செய்திகள்
அதிர்ஷடம் வந்தா இப்படி வரனும்...! லாட்டரியில் ரூ.290 கோடி பரிசு பெற்ற 18 வயது இளம்பெண்!
உலக செய்திகள்

அதிர்ஷடம் வந்தா இப்படி வரனும்...! லாட்டரியில் ரூ.290 கோடி பரிசு பெற்ற 18 வயது இளம்பெண்!

தினத்தந்தி
|
10 Feb 2023 2:44 AM IST

கனடாவில் லாட்டரி சீட்டு வாங்கிய முதல் முறையிலேயே ரூ.290 கோடி பரிசை வென்று ஒரே நாளில் கோடிகளுக்கு அதிபதி ஆனார் 18 வயது இளம்பெண்.

கனடா,

ஒரு நபர் திடீரென்று கோடீஸ்வரராக மாறினால், பல விஷயங்கள் மாறக்கூடும். எல்லாவற்றையும் வாங்க முடியாவிட்டாலும், சந்தேகத்திற்கு இடமின்றி பணத்தால் வாங்கக்கூடியவை நிறைய உள்ளன. லாட்டரியை வென்ற பிறகு, ஜூலியட் லாமோர் என்ற கனடா நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தான் இதுவரை கேட்டறிராத ஒரு வாழ்க்கையாக, தனது வாழ்க்கையை தற்போது மாற்றியுள்ளார்.

லாட்டரியில் பரிசு வென்ற ஜூலியட்டுக்கு 18 வயதுதான் ஆகிறது. கனடாவின் ஒன்ராறியோவில் வசிக்கும் அந்த மாணவி, தனது பிறந்தநாளுக்கு தனித்துவமான ஒன்றைப் பெறுவதற்காக ஷாப்பிங் சென்றுள்ளார். ஆனால், அவருக்கு கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நீண்ட யோசனைக்கு பிறகும், அவரது தாத்தாவின் அறிவுரையின் பேரிலும், அவர் ஒரு லாட்டரி சீட்டைப் வாங்க முடிவு செய்தார். அது தன் வாழ்க்கையையே மாற்றிவிடும் என்று அப்போது அவருக்குத் தெரியவில்லை.

லாட்டரி டிக்கெட் வாங்கத் தெரியாததால், சிறுமியின் தாத்தா அவருக்கு உதவினார். ஒன்ராறியோ லாட்டரி மற்றும் கேமிங் கார்ப்பரேஷன் நிறுவனத்திடம் இருந்து லொட்டோ 6-49 லாட்டரியை வாங்கிவிட்டு சிறுமி வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஜூலியட் அந்த லாட்டரி டிக்கெட் குறித்து மறந்த போயுள்ளார். கடந்த ஜனவரி 7ஆம் தேதி லாட்டரியில் தனது பக்கத்து வீட்டுக்காரர் பரிசு வென்றதை அறிந்ததும், தானும் ஒரு டிக்கெட்டை வாங்கியிருப்பது அப்போதுதான் அவருக்கு நியாபகம் வந்தது.

அந்தப் பெண் தனக்கு ஏதேனும் பரிசு கிடைத்துள்ளதா என்று பார்ப்பதற்காக அந்த லாட்டரியின் செயலியை திறந்தாள். லாட்டரியில் அவருக்கு இந்திய மதிப்பில் ரூ.290 கோடி கிடைத்துள்ளது. ரூ. 290 கோடி சம்பாதித்தது, அவருக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவி திகைத்துப் போனார். ஜூலியட் தனது குடும்பத்தாரிடம் இந்த தகவலை பகிர்ந்து கொண்ட பிறகு, தலா ரூ.2 கோடி மதிப்பிலான ஐந்து மெர்சிடிஸ் கார்களை உடனடியாக விலைக்கு வாங்கினார்.

கூடுதலாக, அவர் ஒரு தனியார் ஜெட் விமானத்தை ரூ. 100 கோடிக்கும், லண்டன் வில்லாவுக்கு ரூ. 40 கோடியும் செலவிட்டுள்ளார். மேலும், புத்திசாலித்தனமான பெண் தனது எதிர்காலத்திற்காக சுமார் 150 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். டாக்டராக ஆசைப்படும் ஜூலியட், தன் தந்தையின் உதவியோடு அந்த பணத்தை நிர்வகித்து வருகிறார்.

மேலும் செய்திகள்