< Back
உலக செய்திகள்
ஒரே நேரத்தில் 10 இளம் பெண்களை திருமணம் செய்த இளைஞர்...!
உலக செய்திகள்

ஒரே நேரத்தில் 10 இளம் பெண்களை திருமணம் செய்த இளைஞர்...!

தினத்தந்தி
|
5 Aug 2023 4:33 PM IST

லஸ்டின் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர். மேலும் பெண்களுக்கு மசாஜ் செய்பவர் ஆவார்.

நியூயார்க்,

அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர் லஸ்டின் இமானுவேல் (28). 10 இளம் பெண்களை ஜூலை 31ம் தேதி ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண விழாவை லஸ்டின் கடற்கரையில் கொண்டாடினார்.

இது தொடர்பான வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள இமானுவேல், "இன்று நான் பத்து பெண்களை மணந்தேன்.. அனைவரும் என் மனைவிகள்" என்ற தலைப்பில் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

ஒன்பது வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில் ஒன்பது மணப்பெண்கள் தங்கள் மாப்பிள்ளையை சுற்றி வருவது இடம்பெற்றுள்ளது. அந்த பெண்கள் கவர்ச்சியாக, குட்டையான, வெள்ளை ஆடைகளை அணிந்துள்ளனர். கையில் பூங்கொத்து வைத்து உள்ளனர். ஒரு மணமகள் லஸ்டினின் மடியில் அமர்ந்திருப்பதைக் காணலாம்.

லஸ்டின் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர். மேலும் பெண்களுக்கு மசாஜ் செய்பவர் ஆவார். இவருக்கு டிக்டாக்கில் அதிக பாலோவர்கள் உள்ளனர். அவர் வெளியிட்டு உள்ள திருமண வீடியோவுக்கு 5,81,000-க்கும் மேற்பட்ட பார்வைகள் கிடைத்து உள்ளன. அவரது சமூக வலைதளத்தில் பல ஆபாசமான படங்கள் மற்றும் வீடியோக்கள் இடம்பெற்று உள்ளன.

மேலும் செய்திகள்