< Back
உலக செய்திகள்
ஜூஸ் குடித்து கின்னஸ் சாதனை படைத்த நபர்
உலக செய்திகள்

ஜூஸ் குடித்து கின்னஸ் சாதனை படைத்த நபர்

தினத்தந்தி
|
20 May 2024 3:22 PM IST

டேவிட் ரஷ் இதுவரை 200க்கும் மேற்பட்ட கின்னஸ் உலக சாதனைகளை முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.

வாஷிங்டன்,

உலகெங்கிலும் வித்தியாசமான பல விஷயங்களை செய்து மக்கள் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த டேவிட் ரஷ் என்ற நபர், புதியதொரு சாதனை படைத்துள்ளார்.

அந்தவகையில் ஒரு லிட்டர் எலுமிச்சை ஜூசை 13.64 விநாடிகளில் குடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதுவரை 200க்கும் மேற்பட்ட கின்னஸ் உலக சாதனைகளை முறியடித்துள்ளார்.

எலுமிச்சை சாறு குடிப்பதற்கு முன், டேவிட் முதலில் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்து பயிற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மூக்கின் வழியாக 1 நிமிடத்தில் 10 பலூன்களில் காற்றை நிரப்பி கின்னஸ் சாதனையை டேவிட் ரஷ் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்