< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
பாகிஸ்தானின் பொருளாதாரம் சீரழிய இந்தியா காரணம் அல்ல - நவாஸ் ஷெரீப்
|20 Dec 2023 7:34 PM IST
நமது காலில் நாமே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டோம்.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் போட்டியிட விண்ணப்பம் செய்தவர்களுடன் கலந்துரையாடும் போது நவாஸ் ஷெரீப் கூறியதாவது:
பிரதமராக நான் பதவி வகித்த 3 ஆட்சிக்காலங்களிலும் ராணுவத்தினர் தலையீட்டால் வீட்டிற்கு அனுப்பப்பட்டேன். பாகிஸ்தானின் பொருளாதாரம் இந்தளவுக்கு சீரழியக் காரணம் இந்தியா அல்ல, ஏன், அமெரிக்காவோ ஆப்கன் கூடஅல்ல.
நமது காலில் நாமே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டோம். 2018 ல் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை அகற்றிவிட்டு, தங்களது சொல்பேச்சு கேட்கும் அரசை, ராணுவம் கொண்டு வந்ததால், மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அரசியல் சாசனத்தை ராணுவம் மீறியபோது அதனை நீதிபதிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பிரதமர் என வரும்போது பதவி நீக்கத்திற்கு ஒப்புதல் கொடுத்தனர். பார்லிமென்ட்டை கலைக்கும் செயலுக்கு ஒப்புதல் அளித்தனர்.
இவ்வாறு நவாஸ் ஷெரீப் கூறினார்.