< Back
உலக செய்திகள்
அபுதாபியில் முதல் இந்து கோவில்: அமீரக அதிபருக்கு நன்றி - பிரதமர் மோடி
உலக செய்திகள்

அபுதாபியில் முதல் இந்து கோவில்: அமீரக அதிபருக்கு நன்றி - பிரதமர் மோடி

தினத்தந்தி
|
13 Feb 2024 10:30 PM IST

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 2 நாட்கள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.

அபுதாபி,

ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடி அபுதாபியில் 'அஹ்லன்' மோடி என்ற தலைப்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

குஜராத்தில் மகாத்மா மந்திரில் நடைபெற்ற குஜராத் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டதற்கு நன்றி. என் அழைப்பை ஏற்று மாநாட்டில் கலந்துகொண்டதன் மூலம் மாநாட்டின் மதிப்பு உலகளவில் பன்மடங்கு உயர்ந்துள்ளது.

எனக்கு உற்சாகமான வரவேற்பளித்ததற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த கவுரவம் எனக்கு கிடைத்தது அல்ல, கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு உரியது. கடந்த 7 மாதங்களில் நாங்கள் 5 முறை சந்தித்துள்ளோம். இது அரிதாக நடக்கக்கூடியது. நானும் இங்கு 7 முறை வருவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளேன்.

அனைத்துத் துறைகளிலும் நாம் முன்னேறிய விதம், ஒவ்வொரு துறையிலும் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே ஒரு நட்பு நீடிக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் இந்து கோவில் சாத்தியமானதற்கு ஷேக் முகமது பின் சயீத் ஆதரவே காரணம்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

மேலும் செய்திகள்