< Back
உலக செய்திகள்
சிலி நாட்டில் உலகின் மிகப்பழமையான மரம் கண்டுபிடிப்பு..!
உலக செய்திகள்

சிலி நாட்டில் உலகின் மிகப்பழமையான மரம் கண்டுபிடிப்பு..!

தினத்தந்தி
|
27 May 2022 9:44 AM GMT

சிலி நாட்டில் உலகின் மிகவும் பழமையான மரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிலி,

சிலியில் உள்ள விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பெரிய தாத்தா என்று அழைக்கப்படும் நான்கு மீட்டர் தடிமனான தண்டு கொண்ட ஒரு பழங்கால அலர்ஸ் மரம் 5,000 ஆண்டுகளுக்கும் மேலானதாக இருக்கலாம் என்று ஒரு புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பாரிஸில் உள்ள காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் ஆய்வகத்தின் விஞ்ஞானி டாக்டர் ஜொனாதன் பேரிச்சிவிச், மரத்தை சோதனை செய்து திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். அவர் கூறும்போது, அலர்ஸ் மிலேனாரியோ என்றும் அழைக்கப்படும் படகோனியன் சைப்ரஸ் மரமானது தற்போது சுமார் 5,484 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று சோதனைகளின் முடிவுகள் தெரிவிப்பதாக அவர் கூறினார்.

உலகின் மிகப்பழமையான மரம் என்று ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ள நிலையில், தற்போது மரத்தைப் பாதுகாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்