< Back
உலக செய்திகள்
மேற்கு நாடுகள் நாஜி படைகளின் வழிமுறைகளை உருவாக்குகின்றன - புதின் குற்றச்சாட்டு
உலக செய்திகள்

'மேற்கு நாடுகள் நாஜி படைகளின் வழிமுறைகளை உருவாக்குகின்றன' - புதின் குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
9 May 2023 5:26 PM IST

நாகரீகத்தின் முக்கியமான திருப்புனையில் நாம் இருக்கிறோம் என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்தார்.

கீவ்,

கடந்த 1945-ம் ஆண்டு ஜெர்மனியின் நாஜி படைகளை வீழ்த்தி வெற்றி பெற்ற தினத்தை ஒவ்வொரு ஆண்டும் வெற்றி தினமாக ரஷிய அரசு கொண்டாடி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு நடைபெற்ற வெற்றி தின கொண்டாட்டத்தின் போது அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது, மேற்குலக நாடுகள் உண்மையான நாஜிக்களின் வழிமுறைகளை உருவாக்கி வருவதாக புதின் குற்றம்சாட்டினார். ரஷியாவை தாக்குவதற்காக திட்டமிடும் மேற்கு நாடுகள், 2-ம் உலகப்போரின் முடிவுகளை மாற்றியமைக்க முயற்சி செய்வதாகவும், தற்போது நாகரீகத்தின் முக்கியமான திருப்புனையில் நாம் இருக்கிறோம் என்றும் கூறினார்.

மேலும் உக்ரைன் பிரச்சினைக்கு மேற்கு நாடுகளின் கட்டுப்பாடற்ற இலக்குகளும், ஆணவமும் தான் காரணம் என்று தெரிவித்த அவர், நமது தாய்நாட்டின் மீது உண்மையான போர் நிகழ்த்தப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்