< Back
உலக செய்திகள்
இந்தியா மற்றும் கனடாவுடன் அமெரிக்கா தொடர்பில் உள்ளது - வெள்ளை மாளிகை

Image Courtesy : AFP

உலக செய்திகள்

இந்தியா மற்றும் கனடாவுடன் அமெரிக்கா தொடர்பில் உள்ளது - வெள்ளை மாளிகை

தினத்தந்தி
|
21 Sep 2023 8:24 PM GMT

கனடா மற்றும் இந்திய அரசுகளுடன் அமெரிக்கா தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

வாஷிங்டன்,

கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப்சிங் நிஜ்ஜர் கடந்த ஜூன் மாதம் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்திய அரசின் உளவாளிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றி வந்த உயர் அதிகாரியை கனடா அரசு நாட்டைவிட்டு வெளியேற்றியது. இதற்கு பதிலடியாக கனடா உயர் தூதரக அதிகாரியை இந்தியாவை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. இதன் காரணமாக இந்தியா-கனடா உறவில் பதற்றமான சூழல் நீடிக்கிறது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் அமெரிக்க அரசின் நிலைப்பாடு குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜேக் சல்லிவான் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "நாங்கள் கனடா அரசின் பிரநிதிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். மேலும் நாங்கள் இந்திய அரசாங்கத்துடனும் தொடர்பில் இருக்கிறோம்.

அமெரிக்கா மற்றும் கனடா இடையிலான உறவில் பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் கருத்தை நான் உறுதியாக நிராகரிக்கிறேன். குற்றச்சாட்டுகளை நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறோம். விரைவில் விசாரணை முன்னெடுத்துச் செல்லப்படுவதை காண விரும்புகிறோம்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்