< Back
உலக செய்திகள்
டெல்லியில் மத்திய வெளிவிவகார மந்திரியுடன் இங்கிலாந்து வெளியுறவு மந்திரி நாளை மறுநாள் சந்திப்பு
உலக செய்திகள்

டெல்லியில் மத்திய வெளிவிவகார மந்திரியுடன் இங்கிலாந்து வெளியுறவு மந்திரி நாளை மறுநாள் சந்திப்பு

தினத்தந்தி
|
27 Oct 2022 10:08 PM IST

இங்கிலாந்து வெளியுறவு மந்திரி ஜேம்ஸ் கிளெவர்லி நாளை மறுநாள் டெல்லியில் மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கரை நேரில் சந்தித்து பேசுகிறார்.



லண்டன்,


இங்கிலாந்து வெளியுறவு மந்திரி ஜேம்ஸ் கிளெவர்லி, மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கரை நேரில் சந்தித்து தூதரக உறவுகளை வலுப்படுத்துவதற்காக இந்தியாவுக்கு வருகை தர இருக்கிறார் என இங்கிலாந்து வெளியுறவு அலுவலகம் தெரிவித்து உள்ளது.

இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்று கொண்ட பின்னர் இரு நாட்களுக்கு முன், கடந்த செவ்வாய் கிழமை மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், இங்கிலாந்து வெளியுறவு மந்திரி ஜேம்ஸ் கிளெவர்லியிடம் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.

அதன்பின் இருவரும், பயங்கரவாத ஒழிப்பு, இரு தரப்பு ஒத்துழைப்புகள் மற்றும் உக்ரைன் மோதல் உள்ளிட்டவை பற்றி ஆலோசனை மேற்கொண்டோம் என பதிவிட்டார். வேறு விவரங்கள் எதனையும் பகிர்ந்து கொள்ளவில்லை என கூறிய நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

இதன்படி, இங்கிலாந்து வெளியுறவு மந்திரி ஜேம்ஸ் கிளெவர்லி மும்பை நகருக்கு நாளை வந்து சேர்கிறார். இதன்பின்னர் அவர் நாளை மறுநாள் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார் என தகவல் தெரிவிக்கின்றது.

மேலும் செய்திகள்