வல்லரசு நாட்டுக்கு வந்த சோதனை... உலகின் நம்பர் ஒன் கடன்கார நாடான அமெரிக்கா
|உலகின் மிகப்பெரிய வல்லரசாக வலம் வரும் அமெரிக்காவின் கடன் சுமை 31.64 லட்சம் கோடி டாலராக உள்ளது.
வாஷிங்டன்,
உலகின் மிகப்பெரிய வல்லரசாக வலம் வரும் அமெரிக்காவின் கடன் சுமை 31.64 லட்சம் கோடி டாலராக உள்ளது. அமெரிக்க அரசின் கடன்களில் 23.4 சதவீதத்தை ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகள் அளித்துள்ளனர். அதாவது 7.32 லட்சம் கோடி டாலர் அளவிலான அமெரிக்க அரசின் கடன் பத்திரங்கள் வெளிநாட்டினர் வசம் உள்ளன.
மொத்த கடன்களில் ஜப்பானின் பங்கு 14.7 சதவீதமாக உள்ளது. அதாவது 1.1 லட்சம் கோடி டாலர் அளவுக்கு ஜப்பான் அளித்துள்ளது. 2-வது இடத்தில் உள்ள சீனாவின் பங்கு 11.9 சதவீதமாக 86,710 கோடி டாலராக உள்ளது. 3-வது இடத்தில் உள்ள பிரிட்டனின் பங்கு 8.9 சதவீதமாக 66,830 கோடி டாலராக உள்ளது. நான்காம் இடத்தில் உள்ள பெல்ஜியத்தின் பங்கு 4.8 சதவீதமாக 33,110 கோடி டாலராக உள்ளது.
5-வது இடத்தில் உள்ள லக்சம்பர்க்கின் பங்கு 4.5 சதவீதமாக 31,820 கோடி டாலராக உள்ளது. 6-வது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்தின் பங்கு 3.9 சதவீதமாக 29,050 கோடி டாலராக உள்ளது. 23,200 கோடி டாலர் கடன் அளித்துள்ள இந்தியா இந்த வரிசையில் 11-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்த கடன்களில் இந்தியாவின் பங்கு 3.1 சதவீதமாக உள்ளது.
உலக அளவில் மிக அதிக கடன் சுமை கொண்ட நாடாக தொடரும் அமெரிக்காவின் கடன் சுமை நொடிக்கு 60 ஆயிரம் டாலர் அளவுக்கு அதிகரித்து வருகிறது.