இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு
|இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டாக்ஹோம்,
உலக அளவில், மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களுக்கு ஆண்டு தோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கும் பணி நேற்று தொடங்கியது. சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நோபல் சபை செயலாளர் தாமஸ் பெர்ல்மன், இதை அறிவித்தார். முதலில், மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் இயற்பியல் துறையில் சாதித்த 3 பேருக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 3 விஞ்ஞானிகள் பியரி அகோஸ்தினி, பெரங்க் க்ரவுஸ், ஆனி ஹுலியர் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு கூட்டாக அளிக்கப்படுகிறது. அணுக்கள், மூலக்கூறுகளுக்குள் இருக்கும் எலக்ட்ரான்களை ஆராய்வதற்கான சோதனைகளுக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.