< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
"போரில் அமைதிக்கான ஒரே வழி உக்ரைனுக்கு உதவுவதுதான்"-இத்தாலி பிரதமர் மெலோனி பேச்சு
|27 Oct 2022 8:56 PM IST
போரில் அமைதிக்கான ஒரே வழி உக்ரைனுக்கு உதவுவதுதான் என்று இத்தாலி பிரதமர் மெலோனி கூறினார்.
ரோம்,
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கு, ராணுவ ரீதியாக தற்காத்துக் கொள்ள உக்ரைனுக்கு உதவ வேண்டும் என்று இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மெலோனியின் கூட்டணி கட்சிகள் ரஷிய அதிபர் புதினுடனான நட்பு காரணமாக போர் விவகாரத்தில் தெளிவற்று இருந்த போதிலும், பிரதமர் மெலோனி பலமுறை உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்தாலியின் முதல் பெண் பிரதமராக ஜார்ஜியா மெலோனி கடந்த வாரம் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.