காசாவுக்கு அடுத்த நெருக்கடி...!! அத்தியாவசிய பொருட்கள் உதவிக்கு செக் வைத்த இஸ்ரேல்
|கடத்தி செல்லப்பட்ட இஸ்ரேல் மக்கள் திரும்பும் வரை, காசாவுக்கான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க அனுமதிக்கமாட்டோம் என இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.
டெல் அவிவ்,
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த சனிக்கிழமை திடீரென ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில், பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர்.
எல்லை பகுதியிலும் புகுந்து அந்த பகுதியில் இருந்த மக்களை தாக்கியது. அப்படி தாக்குதல் நடத்தியபோது, இஸ்ரேல் நாட்டு மக்கள், வெளிநாட்டினர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக பிடித்து வைத்துள்ளது என அறியப்படுகிறது.
காசா மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்திய நிலையில், எண்ணற்ற பாலஸ்தீனியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு போதிய குடிநீர், மருத்துவ வசதி கிடைக்க பெற முடியாத நிலை காணப்படுகிறது. அவர்களுக்கு உதவிகளை மேற்கொள்ள எகிப்து தன்னுடைய எல்லைகளை திறக்கும் என தெரிவித்து இருந்தது.
காசாவில் இஸ்ரேல் படைகளின் தாக்குதலால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. படுக்கைகள், மருந்துகள் இல்லாத சூழலில், 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் தவித்து வருகின்றனர்.
உள்ளது. காசாவில் லட்சக்கணக்கான மக்கள் குடிநீர், உணவு இன்றி தவித்து வருகின்றனர். இந்த சூழலில், மருத்துவமனைகளில் சேருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்த சூழலில், பணய கைதிகளாக ஹமாஸ் பிடித்து வைத்துள்ளவர்களை விடுவிக்கும் வரை மனிதநேயம் சார்ந்த உதவிகளையோ அல்லது எந்தவித அத்தியாவசிய பொருட்களையோ காசாவுக்குள் கொண்டு செல்ல இஸ்ரேல் அனுமதிக்காது என அந்நாட்டு ஆற்றல் துறை மந்திரி கத்ஜ் எச்சரித்து உள்ளார்.
காசாவுக்கு மனிதநேய உதவியா? கடத்தி செல்லப்பட்ட இஸ்ரேல் மக்கள் திரும்பி வீட்டுக்கு வந்தடையும் வரை, மின்சாரமோ, குடிநீர் குழாய் திறப்போ அல்லது எரிபொருள் வாகனம் செல்வதோ அனுமதிக்கப்படாது என அவர் கூறியுள்ளார்.
ஹமாஸ் அமைப்பின் ஆயுத பிரிவு, நேற்று வெளியிட்ட வீடியோ ஒன்றில், பிடித்து வைத்திருந்த பெண் மற்றும் 2 குழந்தைகளை விடுவிக்கும் காட்சிகள் இருந்தன.
ஆனால், அது ஒரு காட்டுமிராண்டி அமைப்பு என்ற உண்மை முகம் தெரியாமல் மறைப்பதற்காக நாடகம் ஆடுகிறது என்று இஸ்ரேல் விமர்சித்தது.