பூமியை விட்டு விலகும் நிலா...! பருவநிலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு என தகவல்
|பூமியிலிருந்து நிலவு, ஒவ்வொரு ஆண்டும் 3.8 செ.மீட்டர் விலகிச் செல்லுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
பூமி சூரியனை சுற்றுவது போல, நிலா பூமியை சுற்றி வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த தகவல் தான் ஆனால் பலருக்கும் தெரியாத தகவல் என்னவென்றால், நிலா கொஞ்சம் கொஞ்சமாக பூமியை விட்டு விலகி சென்று கொண்டிருக்கிறதாம்... இதனால் பூமிக்கும் நிலவுக்குமான தூரம் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
பூமியிலிருந்து நிலவு, ஒவ்வொரு ஆண்டும் 3.8 செ.மீட்டர் விலகிச் செல்லுவதாகவும், இந்த நிகழ்வு பல பில்லியன் ஆண்டுகளாக நடந்து வருவதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பூமிக்கு நிலவுக்கும் இடையிலான தூரம் மாறுபடுவதால், பருவநிலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நிலா தோன்றிய போது பூமிக்கு மிக அருகில் இருந்ததாகவும் அதாவது அப்போது வெறும் 14 ஆயிரம் மைல் தொலைவில். தற்போது பூமிக்கும் நிலவுக்கும் உள்ள தொலைவு 2 லட்சத்து 50 ஆயிரம் மைல் உள்ளதாக கூறப்படுகிறது.