< Back
உலக செய்திகள்
ஈகுவடாரில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பின் தலைவர் கைது

Image Courtesy : AFP

உலக செய்திகள்

ஈகுவடாரில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பின் தலைவர் கைது

தினத்தந்தி
|
1 July 2023 1:57 AM IST

அரசாங்கத்துக்கு அச்சுறுத்தலாக செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈகுவடார் அரசு ஈடுபட்டு வருகிறது.

குவிட்டோ,

தென் அமெரிக்க நாடான ஈகுவடாரில் லாஸ் லோபோஸ் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது அந்த நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பு ஆகும். இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் படுகொலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டில் மட்டும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறை கைதிகள் இந்த லாஸ் லோபோஸ் அமைப்பினரால் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே அரசாங்கத்துக்கு இவர்கள் மிகவும் அச்சுறுத்தலாக உள்ளனர். எனவே இந்த அமைப்பினை ஒடுக்குவதற்கான நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது.

இந்தநிலையில், அங்குள்ள எஸ்மரால்டாஸ் மாகாணத்தில் லாஸ் லோபோஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் சுற்றி திரிவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஈகுவடார் போலீசார் அங்கு ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கொலம்பியா எல்லையில் பதுங்கி இருந்த அந்த அமைப்பின் தலைவர் லா போகாவை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்