காசாவில் 130 சுரங்கங்கள் அழிப்பு
|அங்கு சண்டையிட்டு வரும் வீரர்களுடன் இஸ்ரேல் ராணுவத்தின் பொறியாளர்கள் குழுவும் சென்றுள்ளது.
டெல் அவிவ்,
இது குறித்து 'எக்ஸ்' ஊடகத்தில் இஸ்ரேல் ராணுவத்தின் தலைமை செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி வெளியிட்டுள்ள பதிவில் ,
காசாவில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தொடங்கியதிலிருந்து இதுவரை ஹமாஸ் அமைப்பினரால் உருவாக்கப்பட்டுள்ள 130 சுரங்கப்பாதை நிலைகள் அழிக்கப்பட்டுள்ளன.
அங்கு சண்டையிட்டு வரும் வீரர்களுடன் இஸ்ரேல் ராணுவத்தின் பொறியாளர்கள் குழுவும் சென்றுள்ளது.
அந்தக் குழு, மற்ற வீரர்களுடன் இணைந்து காசாவிலுள்ள ஹமாஸ் அமைப்பினரின் சுரங்க நிலைகள் மற்றும் ஆயுதங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
அந்தக் குழுவினர் சுரங்க நிலைகளின் இருப்பிடங்களைக் கண்டறிவது, அதனை வெடிவைத்து தகர்ப்பது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இஸ்ரேல் ராணுவத்தின் தரைவழித் தாக்குதல் நடவடிக்கையால், பூமிக்கு அடியில் ஹமாஸ் அமைத்துள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பு தகர்க்கப்பட்டு வருகிறது என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.