< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்

'ஐசியு நிரம்பியது'; மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது - சீனாவை பந்தாடும் கொரோனா...!

தினத்தந்தி
|
26 Dec 2022 11:37 AM GMT

மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுவதாகவும், ஐசியு நிரம்பிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பீஜிங்,

உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் பெருமளவு குறைந்துவிட்ட நிலையில் தற்போது வைரஸ் சீனாவில் தலைதூக்கத்தொடங்கிவிட்டது.

2019-ம் ஆண்டு சீனாவின் வுகான் மாகாணத்தில் கொரோனா கண்டறியபட்டபோதும் தொடக்கத்தில் அந்நாட்டில் அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை. கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் சீனாவில் கொரோனா கட்டுக்குள் இருந்தது.

கடந்த 2 ஆண்டுகளாக உலகின் பிற பகுதிகளில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி லட்சக்கணக்கில் உயிர்களை காவு வாங்கியது. ஆனால், விஞ்ஞானிகளின் தீவிர முயற்சியால் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு கொரோனா வைரஸ் பரவல் கிட்டத்தட்ட முறியடிகப்பட்டது. மக்கள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டனர்.

இந்நிலையில், தொடக்கத்தில் சீனாவில் பாதிப்பை ஏற்படுத்தாத கொரோனா தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் தனது கோர முகத்தை காட்டத்தொடங்கிவிட்டது.

கடந்த 1-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை சீனாவில் மட்டும் 24 கோடியே 80 லட்சம் பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக ஒரே நாளில் அதிகபட்சமாக 3 கோடியே 70 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சீனாவில் கொரோனா தனது கோரத்தாண்டவத்தை தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக வெளியான தகவல் பின்வறுமாறு:-

சீனாவின் பீஜிங்கில் உள்ள பீஜிங் யுனேட்டட் குடும்ப மருத்துவமனையில் டாக்டராக உள்ள ஹவ்ரட் பெர்ஸ்டின் கூறுகையில், மருத்துவத்துறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளேன். இது போன்ற சூழ்நிலையை நான் பார்த்ததில்லை. எனது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் (கொரோனா) எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில், கிட்டத்தட்ட அனைவரும் முதியவர்கள். நிறைய பேர் கொரோனா மற்றும் நிமோனியா அறிகுறிகளுடன் உள்ளனர்.

அழுத்தம் மிகுந்த ஒருநாள் பணியை முடித்த பின் பேசிய டாக்டர் ஹவ்ரட் பெர்ஸ்டின், தொடக்கம் முதல் இறுதி வரை மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது' என்றார். ஐசியு நிரம்பிவிட்டது. அவரச பிரிவு, காய்ச்சல் பிரிவு மற்ற பிரிவுகளும் நிரம்பிவிட்டன.

நிரைய பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஒன்று இரண்டு நாளில் குணமடைவதில்லை. ஆகையால், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவோர் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதனால், இஆர் பிரிவுக்கு மக்கள் வந்துகொண்டிருக்கின்றனர். ஆனால், அவர்கள் மேல்மாடியில் உள்ள மருத்துவமனை அறைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. நோயாளிகள் இஆர் பிரிவில் நாள் கணக்கில் சிக்கிக்கொள்கின்றனர்.

கடந்த மாதத்தில் ஒரு கொரோனா நோயாளிக்கும் சிகிச்சை அளிக்கவில்லை என்ற நிலையில் இருந்து மாறி தினமும் டஜன் கணக்கில் கொரோனா நோயாளிகளை பார்க்கிறோம்.

மிகப்பெரிய சவால் என்னவென்றால் உண்மையை கூறவேண்டுமானால் நாங்கள் இதற்கு தயாராகவில்லை' என்று டாக்டர் ஹவ்ரட் பெர்ஸ்டின் கூறினார்.

பீஜிங்கில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் தலைமை மருத்துவர் சோனியா ஜுடர்ட் - ப்ரொவ்யொ (வயது 48) கூறியதாவது:-

சாதாரண நிலைமையை விட நோயாளிகள் எண்ணிக்கை 5 முதல் 6 மடங்கு அதிகரித்துள்ளது. நோயாளிகளாக வருபவர்களில் வயது வரம்பு சராசரியாக 40 ஆக இருந்த நிலையில் அந்த நிலை ஒரு வாரத்தில் 70 ஆக அதிகரித்துள்ளது.

பெரும்பாலான நோயாளிகள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்கவில்லை. உள்ளூர் மருத்துமனைகள் நிரம்பி விட்டதால் இந்த மருத்துமனைக்கு நோயாளிகள் வருகின்றனர். ஏனென்றால், பைசர் தடுப்பூசி நிறுவனம் தயாரித்த பக்ஸ்லொவிட் என்ற கொரோனா தடுப்பு மாத்திரையை வாங்க வேண்டும் என்று வருகின்றனர். அந்த மாத்திரை பெரும்பாலான மருத்துவமனைகளில் குறைவான கையிருப்பே உள்ளது.

நோயாளிகள் தடுப்பூசிக்கு மாற்றாக மாத்திரை வேண்டும் என்றும் என்று நினைக்கின்றனர். ஆனால், தடுப்பூசியை மாத்திரையால் மாற்ற முடியாது.

'பீஜிங்கில் கொரோனாவின் மோசமான அலை இன்னும் தொடங்கவில்லை' என்று சீனாவில் 10 ஆண்டுகளுக்கு மேல் டாக்டராக பணியாற்றி வரும் சோனியா ஜுடர்ட் - ப்ரொவ்யொ கூறியுள்ளார்.

மருத்துவ ஊழியர்களுக்கு கொரோனா, உடல்நலக்குறைவு அதிகரித்துள்ளதால் சீனாவின் சில பகுதிகளில் மருத்துவ உள்கட்டமைப்பு (உபகரணங்கள் ,வளங்கள்) ஏற்கனவே அதன் எல்லையை எட்டிவிட்டன.

சீனாவின் மேற்கு நகரமான ஜுயன் நகரில் மருத்துவமனையில் பணியாற்றி வரும் 22 வயதான நர்ஸ் வாங்க் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறுகையில், கடந்த வாரத்தில் எனது பிரிவில் 45 முதல் 51 நர்சுகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவசர பிரிவில் அனைத்து ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. என்னுடன் வேலை செய்பவர்கள் பலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அனைத்து டாக்டர்களுக்கு வைரஸ் பரவியுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டபோதும், லேசான காய்ச்சல் இருந்தபோதும் பணிக்கு வரவேண்டும் என்று எனக்கும், சக ஊழியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது' என்றார்.

2019-ல் கொரோனா முதன் முதலில் பரவத்தொடங்கிய ஹூபெய் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் மனநலம் சார்ந்த பணியாற்றி வரும் 29 வயது நர்ஸ் ஜியங் கூறுகையில், எனது வார்டில் பணிக்கு வரும் ஊழியர்களின் எண்ணிக்கை 50 சதவிகிதம் குறைந்ததால் புதிதாக நோயாளிகளை சேர்ப்பதை நிறுத்திவிட்டோம். நாம் போதிய உதவியின்றி மருத்துவமனையில் 16 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்து வருகின்றேன்.

நோயாளிகள் கலகத்தில் ஈடுபட்டால் நீங்கள் அவர்களை கட்டுப்படுத்த வேண்டும். ஆனால், நீங்கள் அதை தனியாக செய்ய முடியாது என்பதால் நான் கவலையாக இருக்கிறேன். இது நல்ல சூழ்நிலை அல்ல' என்றார்.

ஆயிரக்கணக்கான முதியவர்கள் இறந்திருக்கலாம் என்று கவலை கொள்வதாக சீன டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தை தலைமையாக கொண்டு செயல்பட்டு வரும் சுகாதாரம் தொடர்பாக தகவல் சேகரிப்பு நிறுவனம், சீனாவில் கொரோனாவுக்கு தினமும் சராசரியாக 5 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துகொண்டிருக்கலாம்' என்று கணித்துள்ளது.

மேலும் படிக்க.... சீனாவில் ஒரேநாளில் 3.70 கோடி பேருக்கு கொரோனா; அதிர்ச்சியில் உறைந்த உலக நாடுகள் - பகீர் தகவல்கள்



மேலும் செய்திகள்