< Back
உலக செய்திகள்
கச்சத்தீவு தொடர்பாக இந்திய அரசு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை- இலங்கை மந்திரி விளக்கம்
உலக செய்திகள்

"கச்சத்தீவு தொடர்பாக இந்திய அரசு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை"- இலங்கை மந்திரி விளக்கம்

தினத்தந்தி
|
2 April 2024 9:39 AM IST

கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக அந்நாட்டு மந்திரி ஜீவன் தொண்டமான் கூறியுள்ளார்.

கொழும்பு,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் கச்சத்தீவு விவகாரம் தற்போது பூதாகரமாக கிளம்பியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியின்போது கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் கட்சியை எப்போதும் நம்ப முடியாது என்று குற்றம் சாட்டினார்.

இதற்கு எதிர்வினையாற்றியுள்ள தி.மு.க., 10 ஆண்டுகாலமாக இதுகுறித்து பேசாமல் தேர்தல் நேரத்தில் பா.ஜ.க. பேசி வருவது ஏன் என கேள்வியெழுப்பியுள்ளது.

இந்த சூழலில், கச்சத்தீவு விவகாரம் குறித்து இலங்கை மந்திரி ஜீவன் தொண்டமான் பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;

"இலங்கையை பொறுத்தவரையில் கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இந்தியா- இலங்கை உடனான வெளியுறவுக் கொள்கை ஆரோக்கியமாக உள்ளது.

கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்கும்படி இந்திய அரசு இதுவரை, எங்களிடம் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. அவ்வாறு இந்திய அரசிடமிருந்து கோரிக்கை ஏதும் இருந்தால், இலங்கை வெளியுறவுத்துறை அதற்கு பதிலளிக்கும்." என்றார்.

மேலும் செய்திகள்