83 வயதில் ஆபாச பட நடிகர் ஆனவரின் அனுபவம்...
|அமெரிக்காவில் 83 வயதில் பாதிரியார் பணியை துறந்து ஆபாச பட நடிகரானவர் தனது அனுபவம் பற்றி கூறுகிறார்.
வடக்கு கரோலினா,
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் வசித்து வருபவர் நாம் செல்ப் (வயது 83). ஓய்வு பெற்ற கிறிஸ்தவ மத போதகர். இவருக்கு பெண் ஒருவருடன் திருமணம் நடந்து 30 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
தனது வாழ்வின் பெரும் பகுதியை கிறிஸ்தவ ஆலயத்திலேயே செலவிட்டு வந்துள்ள ஓய்வு பெற்ற பாதிரியாரான இவர் 2017ம் ஆண்டில் தனது புதிய தொழிலுக்கு மாறியுள்ளார். அது ஆபாச படங்களில் நடிப்பது. அந்த அனுபவம் பற்றி நாம் செல்ப் கூறும்போது, ஆன்மீக வாழ்வின் மகிழ்ச்சியான பகுதியாக செக்சை நாம் நினைக்க வேண்டும் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.
இது ஒரு விருந்தில் கலந்து கொள்வது போன்றது. அதனாலேயே இந்த தொழிலை செய்வதில் நான் விருப்பம் கொள்வதற்கான ஒரு முக்கிய விசயம் ஆகவுள்ளது. இதுவரை கேமிரா முன் மேற்கொள்ளும் இந்த தொழிலை கட்டணம் எதுவும் பெறாமலேயே செய்து வருகிறேன் என கூறியுள்ளார்.
இதற்கு முன் ஹஃபிங்டன் போஸ்ட் என்ற பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், ஆபாச பட நடிகராக இருப்பதில் கிடைத்த அனுபவம் மகிழ்ச்சியானது. உண்மையில் எனது உடல் ஒரு கோவில் என நான் சமீப நாட்களாக கண்டறிந்து கொண்டேன்.
அதில், நெருங்கிய உறவுநிலை மற்றும் மெய்மறந்த இன்பம் ஆகியவை ஒன்றுடன் ஒன்று கலந்திருக்கும் என கூறியுள்ளார். புத்தகத்தில் இருந்து செக்ஸ் சார்ந்த விசயங்கள் ஆபத்து என கூறி, அதன் விதிகளை சமூகம் நீக்கும் வரை ஆபாச படங்களில் தொடர்ந்து நடிக்க திட்டமிட்டு உள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆபாசம் (போர்ன்) என்று கூறுவதில் தனக்கு உடன்பாடில்லை என்று கூறும் அந்த முன்னாள் மதபோதகர், ஓர் அழுத்தப்பட்ட சுற்று சூழலில் இருந்து இறுதியாக வெளியே வந்து, ஒவ்வொரு மரபுசார்ந்த விதிகளில் இருந்தும் வெளியே வந்த நிலையில் தன்னால் வாழ முடிகிறது என கூறுகிறார். அதற்கு போர்ன் என பெயரிடப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறுகிறார். ஆபாச பட நாயகன் பட்டம் தழுவியதில் தனக்கு மகிழ்ச்சியே என்றும் தனது 83 வயதில் அந்த தொழிலுக்கு சென்ற நாம் செல்ப் கூறுகிறார்.