இறந்த உரிமையாளர் இறுதிச்சடங்கில் கண்ணீருடன் மயானம் வரை சென்ற நாய் - பாசத்தில் பெற்ற மகனையே விஞ்சிய ஐந்தறிவு ஜீவன்..!
|இறந்த உரிமையாளர் இறுதிச்சடங்கில் கண்ணீருடன் நாய் மயானம் வரை சென்ற சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இலங்கை,
இலங்கையில் மட்டக்களப்பு - வாழைச்சேனை பகுதியில் முத்துக்குமார் எள்ளுப்பிள்ளை என்னும் மூதாட்டி ஒருவர் வாழ்ந்து வந்துள்ளார். அந்த மூதாட்டி நாய் ஒன்றை குட்டியில் இருந்தே மிகவும் பாசமாக வளர்த்து வந்துள்ளார். அந்த நாய் மூதாட்டி செல்லும் இடத்திற்க்கெல்லாம் செல்லும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், வயோதிகம் காரணமாக முத்துக்குமார் எள்ளுப்பிள்ளை மூதாட்டி நேற்று காலமானர். மூதாட்டி உயிரிழந்ததை அறிந்த அந்த நாய் மூதாட்டி உடல் அருகே நின்றுகொண்டிருந்தது. இது காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதனையடுத்து மூதாட்டியின்உடலை, உறவினர்கள் மயானத்தில் அடக்கம் செய்ய கொண்டு சென்றனர்.
அப்போது மூதாட்டியின் இறுதி ஊர்வலத்திற்கு முன்னே உறவினர்கள், மக்களுடன் நாய், கண்ணீருடன் மயானம் வரை சென்று மூதாட்டியின் உடல் அடக்கம் செய்யும் வரை பக்கதிலேயே நின்று கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்தியது. இந்த காட்சி பலரை கண்கலங்க வைத்துள்ளது.