< Back
உலக செய்திகள்
தைவானை சுற்றி சீன ராணுவம் போர் பயிற்சியை தொடங்கியதால் பதற்றம் அதிகரிப்பு! விமான சேவைகள் பாதிப்பு
உலக செய்திகள்

தைவானை சுற்றி சீன ராணுவம் போர் பயிற்சியை தொடங்கியதால் பதற்றம் அதிகரிப்பு! விமான சேவைகள் பாதிப்பு

தினத்தந்தி
|
4 Aug 2022 10:24 AM IST

தைவானை சுற்றி சீனா ராணுவப் பயிற்சியைத் தொடங்கியிருப்பதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

பீஜிங்,

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு செல்ல இருப்பதாக சமீபத்தில் அமெரிக்க அறிவித்தது. இதற்கு சீனா, கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

சீனாவில் எதிர்ப்பயைும், மிரட்டலையும் புறந்தள்ளிவிட்டு நான்சி பெலோசி நேற்று முன்தினம் தைவான் சென்றார்.

இந்நிலையில், தைவானை சுற்றி சீனா ராணுவப் பயிற்சியைத் தொடங்கியிருப்பதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

சீன ராணுவத்தின் இந்த போர் பயிற்சிக்காக, தைவான் தீவைச் சுற்றியுள்ள ஆறு முக்கிய பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த காலகட்டத்தில் அனைத்து கப்பல்களும் விமானங்களும் தொடர்புடைய கடல் பகுதிகள் மற்றும் வான்வெளிக்குள் நுழையக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தைவானைச் சுற்றியுள்ள பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்திருப்பதால், சீனாவின் திட்டமிட்ட இராணுவப் பயிற்சிகள் காரணமாக தைவான் விமானங்கள் செல்லும் வழித்தடங்கள் மாற்றப்பட்டுள்ளன மற்றும் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன இராணுவப் போர் பயிற்சி காரணமாக சுமார் 900 விமானங்களின் வழித்தடங்கள் மாற்ற வேண்டியிருந்தது மற்றும் 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சீன இராணுவப் போர் பயிற்சி நடைபெறும் தைவானுக்கு அருகில் உள்ள ஆறு ஆபத்து மண்டலங்களை தவிர்க்குமாறு பல விமான நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து, தைவான் அரசு கூறுகையில், தங்கள் நாட்டின் தற்காப்பு திறன்களை வலுப்படுத்தி வருவதாகவும், அமெரிக்கா மற்றும் ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளுடன் நெருக்கமாக ஒருங்கிணைப்பதாகவும் கூறியுள்ளது.

மேலும் செய்திகள்