< Back
உலக செய்திகள்
ஆப்பிரிக்க நாட்டில் கிளர்ச்சியில் ஈடுபட்டதாக கூறி 223 பேரை சுட்டுக்கொன்ற ராணுவம்

Image Courtesy : AFP

உலக செய்திகள்

ஆப்பிரிக்க நாட்டில் கிளர்ச்சியில் ஈடுபட்டதாக கூறி 223 பேரை சுட்டுக்கொன்ற ராணுவம்

தினத்தந்தி
|
25 April 2024 10:07 PM GMT

கிளர்ச்சியில் ஈடுபட்டதாக கூறி 56 குழந்தைகள் உள்பட 223 பேரை ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தனர்.

ஒவ்கடங்கு,

ஆப்பிரிக்க நாடான பர்கினோ பாசோவில் உள்ள குறிப்பிட்ட சில கிராமங்களில் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் மற்றும் கிளர்ச்சிக்கான திட்டங்களை போராட்ட குழுவினர் திட்டமிடுவதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு ராணுவ துருப்புகள் களம் இறக்கப்பட்டு சந்தேகத்திற்குள்ளான நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி நான்டின் மற்றும் சோரா கிராமங்களில் அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டதாக கூறி 56 குழந்தைகள் உள்பட 223 பேரை அந்த நாட்டின் ராணுவம் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இந்த மனித உரிமைகளை மீறிய பயங்கரவாத தாக்குதல் குறித்து மனித உரிமைகள் ஆணையம் உள்பட சர்வதேச நிறுவனங்கள் விசாரணை நடத்த உள்ளன.


மேலும் செய்திகள்