< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
நெருங்கும் பொதுத் தேர்தல்..! ஜெயில் கைதிகளுக்கு விடுதலை... சிறைச்சாலையின் வெளியே கொண்டாட்டம்
|22 May 2023 9:44 PM IST
ஜிம்பாப்வே நாட்டில் பெரும்பாலான கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வே,
ஜிம்பாப்வே நாட்டில் பெரும்பாலான கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேவில் சிறைச்சாலைகளில் இருந்து 5-ல் ஒரு கைதிக்கு பொதுமன்னிப்பு மூலம் விடுதலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து 4 ஆயிரத்து 270 கைதிகள் சிறையில் இருந்து வெளிவந்தனர். விரைவிலேயே அந்நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதன்மூலம் விடுதலையான கைதிகள் தேர்தலில் வாக்களிக்க முடியும்.
விடுதலையான கைதிகள் சிறைச்சாலைகளில் இருந்து உற்சாகமாக நடனமாடியபடி வெளிவந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.