< Back
உலக செய்திகள்
சீன சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லை - தாய்லாந்து அறிவிப்பு
உலக செய்திகள்

சீன சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லை - தாய்லாந்து அறிவிப்பு

தினத்தந்தி
|
15 Sept 2023 3:55 AM IST

சுற்றுலா துறையை மீட்டெடுக்கும் வகையில் சீன சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லை என்று தாய்லாந்து அறிவித்துள்ளது.

பாங்காங்,

தாய்லாந்து நாட்டின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக அதன் அண்டை நாடான சீனாவில் இருந்து தாய்லாந்துக்கு ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். கடந்த 2019-ம் ஆண்டு நிலவரப்படி சீனாவில் இருந்து மட்டும் 1 கோடிக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர்.

ஆனால் கொரோனா தொற்றுக்கு பின்னர் இந்த எண்ணிக்கை பல மடங்கு குறைந்தது. தற்போது இயல்பு நிலை திரும்பியதால் படிப்படியாக இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனினும் கடுமையான விசா கட்டுப்பாடுகளால் கடந்த 6 மாதங்களில் இதுவரை 14 லட்சம் சுற்றுலா பயணிகள் மட்டுமே சீனாவில் இருந்து வந்துள்ளனர்.

எனவே சுற்றுலா துறையை மீட்டெடுக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி வருகிற 25-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 29-ந்தேதி வரை சீனாவில் இருந்து சுற்றுலா வருபவர்களுக்கு விசா பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் அறிவித்தார். மேலும் கஜகஸ்தான் நாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என தாய்லாந்து சுற்றுலா துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்