< Back
உலக செய்திகள்
பாகிஸ்தானின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக பயங்கரவாதம் தொடர்கிறது- ஷேபாஸ் செரீப்
உலக செய்திகள்

பாகிஸ்தானின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக பயங்கரவாதம் தொடர்கிறது- ஷேபாஸ் செரீப்

தினத்தந்தி
|
17 Nov 2022 6:07 AM GMT

பாகிஸ்தானின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக பயங்கரவாதம் தொடர்கிறது என்று அந்நாட்டின் பிரதமர் ஷேபாஸ் செரீப் கண்டனம் கூறினார்.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வாவின் லக்கி மார்வாட்டில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 6 போலீசார் கொல்லப்பட்டனர்.மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பயங்கரவாதிகள் வேன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் உள்துறை மந்திரி ராணா சனாவுல்லாவும் லக்கி மார்வாட்டில் போலீசார் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தலைமை செயலாளர் மற்றும் கைபர் பக்துன்க்வா ஐஜி யிடம் அறிக்கை கேட்டுள்ளதாக மத்திய மந்திரி கூறினார்.

பாகிஸ்தானின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக பயங்கரவாதம் தொடர்கிறது என்று லக்கி மார்வாட் தாக்குதலுக்கு பிரதமர் ஷேபாஸ் செரீப் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் செரீப் கூறியதாவது-

பயங்கரவாதம் பாகிஸ்தானின் முதன்மையான பிரச்சனைகளில் ஒன்றாகத் தொடர்கிறது. நமது ஆயுதப் படைகளும், காவல்துறையும் வீரத்துடன் போராடி வருகின்றன. லக்கி மார்வாட்டில் போலீஸ் வேன் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைக் கண்டிக்க வார்த்தைகள் போதாது என கூறினார்.

மேலும் செய்திகள்