< Back
உலக செய்திகள்
ஆப்பிரிக்காவில் பயங்கரம்: கிராமத்துக்குள் பயங்கரவாதிகள் புகுந்து துப்பாக்கி சூடு - 26 பேர் பலி

கோப்புப்படம்

உலக செய்திகள்

ஆப்பிரிக்காவில் பயங்கரம்: கிராமத்துக்குள் பயங்கரவாதிகள் புகுந்து துப்பாக்கி சூடு - 26 பேர் பலி

தினத்தந்தி
|
26 Oct 2023 2:08 AM GMT

ஆப்பிரிக்காவில் கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 பேர் பலியாகியுள்ளனர்.

கின்ஷாசா, அக்.26-

ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கிழக்கு மாகாணமான வடக்கு கினுவில் பயங்கரவாதிகள் அதிக அளவில் நாசக்கார செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அங்குள்ள வளம்மிக்க வைர சுரங்கங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தனி அரசாங்கம் நடத்துகிறார்கள். இந்தநிலையில் அங்குள்ள ஒய்சா என்னும் கிராமத்தில் பயங்கரவாதிகள் சிலர் திடீரென அத்துமீறி நுழைந்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

கண்ணில் படும் நபர்கள் மீது சரமாரி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திவிட்டு பயங்கரவாதிகள் தப்பியோடினர். இதுகுறித்து காங்கோ ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த ராணுவத்தினர் அங்கு மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்த தாக்குதலில் 26 பேர் உடலில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரின் நிலைமை படுமோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

மேலும் செய்திகள்