< Back
உலக செய்திகள்
துருக்கி-சிரியாவில் பயங்கர நிலநடுக்கம்: புகைப்பட தொகுப்பு...!

துருக்கி-சிரியாவில் பயங்கர நிலநடுக்கம்...!

உலக செய்திகள்

துருக்கி-சிரியாவில் பயங்கர நிலநடுக்கம்: புகைப்பட தொகுப்பு...!

தினத்தந்தி
|
6 Feb 2023 2:13 PM IST

துருக்கி- சிரியா எல்லையில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

இஸ்தான்புல்,

துருக்கி- சிரியா எல்லையில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் காசியண்டெப் நகர் அருகே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின.

இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. கடுமையான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அதிகாலை என்பதால் வீடுகளில் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தபோது நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டிடங்கள் இடிந்து அதன் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர்.

இந்த நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்க துருக்கி - சிரியாவின் மீட்புக்குழுவினர் களமிறக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 521 பேர் உயிரிழந்துள்ளனர். துருக்கியில் 284 பேரும், சிரியாவில் 237 பேரும் என மொத்தம் 521 பேர் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளனர் அவர்களை மீட்கவும் மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிலநடுக்கத்தில் பாதிப்பு அதிக அளவில் உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

துருக்கி-சிரியாவில் பயங்கர நிலநடுக்கம்...!

துருக்கி- சிரியா எல்லையில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

துருக்கியின் காசியண்டெப் நகர் அருகே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின.

இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.

கடுமையான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

அதிகாலை என்பதால் வீடுகளில் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

இந்த நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்க துருக்கி - சிரியாவின் மீட்புக்குழுவினர் களமிறக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

நிலநடுக்கத்தில் பாதிப்பு அதிக அளவில் உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

மேலும் செய்திகள்