< Back
உலக செய்திகள்
பிலிப்பைன்சில் பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவு
உலக செய்திகள்

பிலிப்பைன்சில் பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவு

தினத்தந்தி
|
27 July 2022 3:33 AM GMT

பிலிப்பைன்சில் அப்ரா மாகாணத்தில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

மணிலா,

பிலிப்பைன்சின் அப்ரா மாகாணத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் தலைநகர் மணிலா உள்ளிட்ட பல பகுதிகளில் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகி உள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், நிலநடுக்கத்தின் பாதிப்புகள் அதிகமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

பிலிப்பைன்சில் 1990-ம் ஆண்டு 7.7 என பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 2,000 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்