< Back
உலக செய்திகள்
அர்மேனியா, அஜர்பைஜான் இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரிப்பு
உலக செய்திகள்

அர்மேனியா, அஜர்பைஜான் இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரிப்பு

தினத்தந்தி
|
26 Sept 2022 11:59 PM IST

அர்மேனியா, அஜர்பைஜான் இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏரிவன்,

ஆர்மீனியா-அஜர்பைஜான் எல்லையில் 4400 சதுர கிமீ பரப்பளவு கொண்ட நார்கோனா காராபாக் மலை பகுதி தான் இரு நாடுகளுக்குமான எல்லையாக உள்ளது. இந்த பகுதி யாருக்கு சொந்தம் என மோதல் நிலவுகிறது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக சர்ச்சை நிலவுகிறது.

1988ம் ஆண்டு நடந்த எல்லை போரில் 30 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். 1994ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தபோது, நார்கோனா காராபாக் மலை பகுதி அஜர்பைஜான் நாட்டின் பகுதியாக அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் அப்பகுதியில் ஆர்மேனியா நாட்டு ஆதரவாளர்கள் அதிகம் உள்ளனர். அவர்கள் கட்டுப்பாட்டில் தான் இப்பகுதி உள்ளது.

2016ம் ஆண்டு முதல் மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே எல்லை விவகாரம் தொடர்பாக சண்டை மூண்டது. 2020ம் ஆண்டு அது போராக மாறியது. அப்போது ரஷியா தலையிட்டு அமைதிக்கு வழிவகுத்தது. அந்த போரில் 6000 பேர் வரை பலியாகினர்.

இந்நிலையில் அர்மேனியா, அஜர்பைஜான் இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால அஜர்பைஜான் எல்லையையொட்டி ஈரான் அரசு தனது படைகளை குவித்து வருகிறது.

ஈரானை போலவே அஜர்பைஜானிலும் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இருந்தபோதும் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் அஜர்பைஜான் அரசு ஆதரவுடன் அங்கு முகாமிட்டப்படி தங்கள் அணு ஆயுத நடவடிக்கைகளை உளவு பார்த்துவருவதாக ஈரான் குற்றம்சாட்டி வருகிறது. இதனால் கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் அர்மேனியாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ள ஈரான் அரசு அஜர்பைஜான் எல்லையில் பீரங்கிகள் மற்றும் கவச வாகனங்களை குவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்