< Back
உலக செய்திகள்
பேச்சு குறைபாட்டால் பள்ளியில் கேலி: 21 பேர் உயிரை பறித்த அமெரிக்க இளைஞர் குறித்த பரபரப்பு தகவல்

Image Courtesy: PTI

உலக செய்திகள்

பேச்சு குறைபாட்டால் பள்ளியில் கேலி: 21 பேர் உயிரை பறித்த அமெரிக்க இளைஞர் குறித்த பரபரப்பு தகவல்

தினத்தந்தி
|
28 May 2022 1:26 AM GMT

21 பேர் உயிரை பறித்த அமெரிக்க இளைஞர் குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

நியூயார்க்,

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள தொடக்கநிலைப் பள்ளியொன்றில் 18 வயது இளைஞா் நடத்திய சரமாரி துப்பாக்கிச் சூட்டில் 19 மாணவா்கள், 2 ஆசிரியா்கள் பலியாகினா். துப்பாக்கிச்சூடு நடத்திய சால்வடார் ராமோஸ் என்கிற இளைஞரை போலீசார் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் அமெரிக்கா மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் பெரும் அதிர்வலைகளையும், சோகத்தையும் இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.

சால்வடார் ராமோஸ் 3 வயது இருக்கும் போதே அவரது தாயும், தந்தையும் பிரிந்துவிட்ட நிலையில், தாயின் பராமரிப்பில் இருந்துள்ளார். ராமோசின் தாய் போதைப்பழக்கத்துக்கு அடிமையானதால் அவருக்கு தாயின் அன்பும், அரவணைப்பும் கிடைக்காமல் போனதோடு, ராமோசை தினமும் அவரது தாய் அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிகிறது.

இதனால் தாயிடம் இருந்து பிரிந்து பாட்டியுடன் வசித்து வந்த ராமோசுக்கு பேச்சு குறைபாடு இருந்ததால் பள்ளியில் சக மாணவர்களால் கேலி, கிண்டலுக்கு ஆளாகி வந்தார். இதனால் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார்.

இந்த சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனக்கு 18 வயது நிரம்பியதும், சேகரித்து வைத்த பணத்தில் 2 நவீன துப்பாக்கிகளை வாங்கியுள்ளார். அதன் பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்துவது குறித்து இன்ஸ்டாகிராமில் மறைமுகமாக பல பதிவுகளை வெளியிட்டு வந்துள்ளார். அதை தொடர்ந்து, பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து கொடூர தாக்குதலில் ஈடுபட்ட ராமோஸ் போலீசாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானார்.

மேலும் செய்திகள்