< Back
உலக செய்திகள்
14 வயது மாணவரை 25 முறை...!!! 74 வயது ஆசிரியைக்கு 600 ஆண்டுகள் சிறை...?
உலக செய்திகள்

14 வயது மாணவரை 25 முறை...!!! 74 வயது ஆசிரியைக்கு 600 ஆண்டுகள் சிறை...?

தினத்தந்தி
|
8 Aug 2023 10:49 AM IST

அக்டோபர் 27 அன்று தண்டனை விதிக்கப்படும் வரை நெல்சன் கோச் சிறையில் இருக்குமாறு ஸ்கைல்ஸ் நீதிபதி உத்தரவிட்டார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் விஸ்கான்சினில் உள்ள தோமாஹாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2016 ஆம் ஆண்டில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் அன்னே என் நெல்சன் கோச். அப்போது 14 வயது மாணவனை 25 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

பள்ளியின் வகுப்பறைக்கு பின்புறம் மாணவனை ஆசிரியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது நெல்சன்-கோச்க்கு 67 வயது, சிறுவனுக்கு 14 வயது என்று கூறப்படுகிறது. சிறுவனை 25க்கும் மேற்பட்ட முறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி உள்ளார்.

இந்த வழக்கில் அவருக்கு 600 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என கூறப்படுகிறது. அக்டோபர் 27 அன்று தண்டனை விதிக்கப்படும் வரை நெல்சன் கோச் சிறையில் இருக்குமாறு ஸ்கைல்ஸ் நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் மன்ரோ கவுண்டி சர்க்யூட் நீதிமன்ற நீதிபதி ரிச்சர்ட் ராட்க்ளிப் அவருக்கு தண்டனை விதிக்கப்படும் வரை அவர் ஜிபிஎஸ் மானிட்டர் மூலம் கண்காணிக்கப்படுவார் என கூறி விடுவித்தார்.

மேலும் செய்திகள்