< Back
உலக செய்திகள்
தான்சானியா:  கடல் ஆமை கறியை சாப்பிட்ட 8 குழந்தைகள் பலி
உலக செய்திகள்

தான்சானியா: கடல் ஆமை கறியை சாப்பிட்ட 8 குழந்தைகள் பலி

தினத்தந்தி
|
9 March 2024 8:40 AM GMT

கடல் ஆமை கறியை சாப்பிட்டதில், முதியவர்களில் 78 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஜன்ஜிபார்,

தான்சானியா நாட்டின் ஜன்ஜிபார் பகுதிக்கு உட்பட்ட பெம்பா தீவில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என சிலர் ஆமை கறியை வாங்கி சாப்பிட்டு உள்ளனர். இதில், 8 குழந்தைகள் உயிரிழந்தனர்.

இதுபற்றி மாவட்ட மருத்துவ அதிகாரி ஹாஜி பகாரி ஹாஜி கூறும்போது, உயிரிழந்தவர்கள் அனைவரும் கடல் ஆமை கறியை வாங்கி சாப்பிட்டு உள்ளனர் என மருத்துவ ஆய்வக பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. கடந்த செவ்வாய் கிழமை இந்த சம்பவம் நடந்தபோதும், திட்டு விழும் என்ற பயத்தில் இதுபற்றி அதிகாரிகளிடம் தெரிவிக்கப்படவில்லை.

இந்த சம்பவத்தில், முதியவர்களில் 78 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கடந்த 2023-ம் ஆண்டு மார்ச்சில் இதேபோன்றதொரு சம்பவம் நடந்தது. தான்சானியாவின் இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்த மாபியா தீவில் வேணி கிராம பகுதியில், கடல் ஆமை கறியை வாங்கி சாப்பிட்ட 7 பேர் உயிரிழந்தனர். 8 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர்.

வேணி கிராமத்தின் தலைவர் ஜுமா கதிபு கூறும்போது, மீனவர்களிடம் இருந்து கடல் ஆமை கறியை வாங்கி அவர்கள் சாப்பிட்டு உள்ளனர். அது விஷம் நிறைந்தது என சந்தேகிக்கப்படுகிறது என்று கூறினார்.

மேலும் செய்திகள்