< Back
உலக செய்திகள்
தைவானில் முதன் முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி போர்க்கப்பல்
உலக செய்திகள்

தைவானில் முதன் முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி போர்க்கப்பல்

தினத்தந்தி
|
29 Sept 2023 4:25 AM IST

தைவானில் முதன் முறையாக நர்வால் என்ற நீர்மூழ்கி போர்க்கப்பல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது.

தைபே நகரம்,

சீனாவின் ஒரு பகுதியாக இருந்த தைவான் 1949-ம் ஆண்டு தனிநாடாக பிரிந்தது. ஆனால் சமீப காலமாக அதனை தன்னுடன் மீண்டும் இணைத்துக்கொள்ள சீனா துடிக்கிறது. இதனால் தைவான் எல்லையில் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி சீனா போர்ப்பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அதேசமயம் சீனாவுக்கு பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக தைவானும் கூறி உள்ளது.

இந்தநிலையில் தைவானில் முதன் முறையாக நர்வால் என்ற நீர்மூழ்கி போர்க்கப்பல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இதனை அறிமுகம் செய்து வைக்கும் விழா அங்குள்ள காஹ்சியுங் நகரில் நடைபெற்றது. இதில் அதிபர் சாய்-இங்-வென் கலந்து கொண்டு பேசுகையில், தைவான் வரலாற்றில் இது முக்கியமான நாள் ஆகும் என கூறினார்.

இந்த நீர்மூழ்கி கப்பலானது 229.6 அடி நீளம், 26.2 அடி அகலம் மற்றும் 59 அடி உயரம் கொண்டது. இதில் 3 ஆயிரம் டன் எடை வரையிலான பொருட்களை சுமந்து செல்லலாம். ஒருசில சோதனைகளுக்கு பின்னர் இந்த கப்பல் அடுத்த ஆண்டு நாட்டின் கடற்படையில் சேர்க்கப்படும் என தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்