< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
தைவானில் புயல் காரணமாக 45 விமானங்கள் ரத்து
|2 Sept 2023 10:59 PM IST
தைவானில் புயல் காரணமாக 45 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
தீவு நாடான தைவானில் கேப் எலுவான்பி நகரின் கிழக்கு பகுதியில் புதிய புயல் உருவாகி உள்ளது. ஹைகுய் என பெயரிடப்பட்ட இந்த புயலானது தைவானின் மேற்கு பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. இது தைவானில் கரையை கடக்கும்போது மணிக்கு 16 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று அடிக்கும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தைவானில் 28 சர்வதேச விமானங்கள் மற்றும் 18 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. சில விமானங்கள் புறப்பட தாமதமானது. இதனால் விமான நிலையத்துக்கு வந்திருந்த பயணிகள் பெரும் அவதியடைந்தனர். அதேபோல் பயணிகளின் பாதுகாப்பு கருதி படகு போக்குவரத்தும் அங்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.