< Back
உலக செய்திகள்
சிரியாவில் 7 கிளர்ச்சியாளர்களை சுட்டு கொன்ற ராணுவம்
உலக செய்திகள்

சிரியாவில் 7 கிளர்ச்சியாளர்களை சுட்டு கொன்ற ராணுவம்

தினத்தந்தி
|
27 Aug 2023 12:14 AM IST

கிளர்ச்சியாளர்கள் சென்ற வாகனங்கள் மீது சிரியா ராணுவத்தினர் துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.

சிரியாவில் கடந்த 2011-ல் தொடங்கிய உள்நாட்டு போர் 12 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு அரசாங்கத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம் சிரியாவுக்கு ஆதரவாக ரஷிய ராணுவம் உள்ளது. அதன் உதவியோடு கிளர்ச்சியாளர்களிடம் இருந்த பல்வேறு பகுதிகளை அரசாங்கம் மீட்டுள்ளது. எனினும் மீதமுள்ள இத்லீப், ஹமா, அலெப்போ போன்ற பகுதிகளை மீட்க அரசாங்கம் போராடி வருகிறது.

இந்தநிலையில் அலெப்போ மாகாணத்தில் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கிளர்ச்சியாளர்கள் சென்ற வாகனங்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். மேலும் பலருக்கு படுகாயம் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் என்ற அமைப்பை சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் என அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் செய்திகள்