< Back
உலக செய்திகள்
அமெரிக்காவில் கண்காட்சிக்குள் புகுந்து மர்மநபர் துப்பாக்கிச்சூடு - 3 பேர் படுகாயம்
உலக செய்திகள்

அமெரிக்காவில் கண்காட்சிக்குள் புகுந்து மர்மநபர் துப்பாக்கிச்சூடு - 3 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
16 Oct 2023 2:39 AM IST

அமெரிக்காவில் கண்காட்சிக்குள் மர்மநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் படுகாயமடைந்தனர்.

டல்லாஸ்,

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் முக்கிய நகரான டல்லாசில் அரசு சார்பில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கண்ணை கவரும் அலங்கார விளக்குகள், விதவிதமான உணவு பண்டங்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளை ரசித்து களித்தப்படி பொதுமக்கள் உற்சாகமாக வலம் வந்தனர்.

அப்போது மர்மநபர் ஒருவர் கண்காட்சிக்குள் திடீரென புகுந்தார். பின்னர் அவர் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை கொண்டு சரமாரி தாக்குதலில் ஈடுபட்டார். இதனால் பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். கூட்ட நெரிசல் காரணமாக பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இந்த தாக்குதலில் 3 பேர் உடலில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்தநிலையில் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய மர்மநபரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்