< Back
உலக செய்திகள்
ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் - 5 பேர் பலி
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் - 5 பேர் பலி

தினத்தந்தி
|
11 Jan 2023 11:57 PM IST

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 5 பேர் பலியாகினர்.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் 2021-ம் ஆண்டில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். தலிபான்களின் போட்டி அமைப்பான கொராசன் மாகாண ஐ.எஸ். அமைப்பானது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளியுறவு அமைச்சக அலுவலக வளாகத்தில் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த தாக்குதலில் 5 பேர் பலியாகியிருக்கலாம். பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தற்கொலை படை தாக்குதலாக இருக்கலாம் எனவும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

மேலும் செய்திகள்