வங்காளதேசத்தில் மருந்து பொருட்கள் விலை திடீர் உயர்வு
|வங்காளதேசத்தில் மருந்து பொருட்களின் விலை திடீரென உயர்ந்துள்ளது.
டாக்கா,
அண்டை நாடான வங்காளதேசத்தில் மருத்து பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் விலை அதிகரித்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் ஒன்றான வங்காளதேசம் மருந்து பொருட்களுக்கு வெளிநாடுகளை சார்ந்துள்ளது. மருந்து தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களின் திடீர் தட்டுப்பாடு, அன்னிய செலாவணி கையிருப்பு குறைவு போன்ற காரணங்களால் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் மருந்துகளின் விலைகளை உயர்த்தியுள்ளன..
நாட்டில் உற்பத்தியாகும் மருந்துகளின் விலையை நிர்ணயிக்கவும், கட்டுப்படுத்தவும் அரசுக்கு அதிகாரம் கிடையாது என கூறப்படுகிறது. இதனால் மருத்துவ நிறுவனங்கள் கடந்த ஓர் ஆண்டிலேயே 90 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. மருத்துவ உபகரணங்களின் விலையும் 4 மடங்கு விலை உயர்ந்ததாக அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
மக்களின் அத்தியாவசிய தேவைகளின் ஒன்றாக விளங்கும் மருந்துகளின் கட்டுக்கடங்கா விலை உயர்வு சாமானியன் உள்பட ஏழை, நடுத்தர மக்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கிளர்ச்சியில் ஈடுபடலாம் என அந்த நாட்டின் உளவுத்துறை அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.