< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
காலநிலை மாற்றத்தால் இலங்கையில் ஆடு, மாடுகள் திடீர் சாவு
|14 Dec 2022 4:40 AM IST
ஆடு, மாடுகள் உயிரிழப்புக்கு தற்போது நிலவும் அசாதாரண வானிலை மாற்றம் காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொழும்பு,
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் திடீரென அதிகரித்த கால்நடைகள் உயிரிழப்பு குறித்து அந்த நாட்டின் பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் பிற ஆராய்ச்சி மையங்கள் இணைந்து ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் கடந்த 12-ந் தேதி மட்டும் 1,660-க்கும் மேற்பட்ட ஆடு, மாடு மற்றும் எருமைகள் இறந்ததாக வேளாண் அமைச்சகத்தின் கால்நடைப்பிரிவு தெரிவித்தது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், சமீபத்தில் ஆடு, மாடுகள் உயிரிழப்புக்கு தற்போது நிலவும் அசாதாரண வானிலை மாற்றம் காரணமாக இருக்கலாம் என தெரிவித்தனர்.