< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
சூடான் மோதல்: 50 லட்சம் பேர் புலம் பெயா்வு - ஐ.நா. தகவல்
|7 Sept 2023 10:54 AM IST
சூடான் மோதல் காரணமாக 50 லட்சம் பேர் புலம் பெயா்ந்து தவித்து வருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
சூடான்,
சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படைக்கும் இடையே கடந்த மூன்றரை மாதங்களுக்கு மேல் மோதல் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 4 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் போ் வரை உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சூடான் மோதல் காரணமாக சூடானில் இருந்து 50 லட்சம் போ் தங்களது இருப்பிடங்களைவிட்டு வெளியேறி தவித்து வருகின்றனா். புலம் பெயா்ந்தவர்களில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக உள்ளனா். 7.50 லட்சம் பேர் சர்வதேச அகதிகளாகியுள்ளனர். அவர்கள், அண்டை நாடுகளான எகிப்து, சாட் போன்ற நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக சா்வதேச நாடுகள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் இதுவரை வெற்றி பெறவில்லை என்று கூறப்படுகிறது