< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
இந்தியா-இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை - இலங்கை மந்திரி தகவல்
|20 Dec 2022 7:39 AM IST
காங்கேசன் துறைக்கும், பாண்டிச்சேரிக்கும் இடையிலான கப்பல் சேவை வரும் ஜனவரி மாதம் தொடங்கப்படும் என இலங்கை மந்திரி தெரிவித்தார்.
கொழும்பு,
இந்தியா-இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மந்திரி நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். புத்தகயா செல்லும் யாத்ரீகர்களுக்கும், வர்த்தக பயணங்களை மேற்கொள்பவர்களுக்கும் இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும் என அவர் கூறினார்.
இது தொடர்பாக கொழும்புவில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், இத்திட்டத்தின் முதற்கட்டமாக இலங்கை யாழ்பாணத்தில் உள்ள காங்கேசன் துறைக்கும், பாண்டிச்சேரிக்கும் இடையிலான கப்பல் சேவை வரும் ஜனவரி மாத மத்தியில் தொடங்கப்படும் என தெரிவித்தார்.