< Back
உலக செய்திகள்
ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கூட்ட நெரிசல் - 37  பேர் பலி
உலக செய்திகள்

ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கூட்ட நெரிசல் - 37 பேர் பலி

தினத்தந்தி
|
21 Nov 2023 8:56 PM IST

கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

பிரேஸ்விலி,

மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ குடியரசு. இந்நாட்டின் ராணுவத்திற்கு புதிதாக ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில், தலைநகர் பிரேஸ்விலியில் உள்ள மைதானத்தில் இன்று ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், பங்கேற்க ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மைதானத்திற்கு வந்திருந்தனர்.

அப்போது, இளைஞர்கள் அனைவரும் மைதானத்திற்குள் நுழைய முயற்சித்தனர். இதனால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 37 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இதனை தொடர்ந்து படுகாயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்