< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ஜெர்மனியில் பொதுமக்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் - பலர் படுகாயம்
|31 May 2024 7:28 PM IST
ஜெர்மனியில் பொதுமக்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
பெர்லின்,
ஜெர்மனியின் தென்மேற்கில் அமைந்துள்ள மன்ஹெய்ம் நகரின் மையப்பகுதியில் மார்க்பிளாட்ஸ் சதுக்கத்தில் இன்று காலை 11.30 மணியளவில் பொதுமக்கள் மீது ஒரு நபர் திடீரென கத்தியால் குத்தி தாக்குதல் நடத்த தொடங்கினார். இதனால் அங்கிருந்த மக்கள் அலறிடித்துக் கொண்டு ஓடினர்.
இதையடுத்து போலீசார் உடனடியாக செயல்பட்டு கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஏராளமானோர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கான நோக்கம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், இனி பொதுமக்களுக்கு எந்த அபாயமும் இல்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.