< Back
உலக செய்திகள்
இலங்கையின் 75-வது சுதந்திர தின விழா- கறுப்பு நாளாக கொண்டாடும் தமிழ் மக்கள்
உலக செய்திகள்

இலங்கையின் 75-வது சுதந்திர தின விழா- கறுப்பு நாளாக கொண்டாடும் தமிழ் மக்கள்

தினத்தந்தி
|
5 Feb 2023 10:41 AM IST

பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டதுடன், கருப்பு கொடிகள் கட்டி எதிர்ப்பு மற்றும் கடையடைப்பு செய்தனர்.

கொழும்பு,

இலங்கையில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ் மக்கள் கறுப்பு நாளாக அனுசரித்து வருகின்றனர்.

அந்த வகையில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டதுடன், கருப்பு கொடிகள் கட்டி எதிர்ப்பு மற்றும் கடையடைப்பு செய்தனர். குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

இதில், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்