< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
6 நாட்கள் சுற்றுப்பயணம்: சீனா சென்றார் இலங்கை பிரதமர்
|26 March 2024 2:15 AM IST
சீனாவிற்கு இலங்கை தலைவர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
பெய்ஜிங்,
இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தனே, 6 நாட்கள் அரசு முறை பயணமாக சீனா சென்றுள்ளார். அவர் நேற்று பெய்ஜிங் சென்றடைந்தார்.
இலங்கைத் தலைவர் ஒருவர் பெய்ஜிங்கிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். இந்த சுற்றுப்பயணத்தில், பொருளாதார மந்த நிலையில் இருக்கும் இலங்கை, கடன் உதவியை பெறுவது குறித்த பேச்சுவார்த்தை முக்கிய இடம் வகிக்கும் என்று கூறப்படுகிறது.
2022-ம் ஆண்டில், இந்தியா சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உதவியை வழங்கியதால் இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து ஓரளவு மீண்டது குறிப்பிடத்தக்கது.