< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
தமிழ் கட்சிகளுடன் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பேச்சுவார்த்தை
|22 Dec 2023 4:19 AM IST
இந்தியாவில் அகதி முகாம்களில் உள்ள இலங்கையர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு,
இலங்கை அதிபராக கடந்த ஆண்டு பதவியேற்றது முதல் தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக தமிழ் கட்சிகளுடன் ரணில் விக்ரமசிங்கே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
அந்த வகையில் நேற்று தலைநகர் கொழும்புவில் தமிழ் கட்சியின் தலைவர்களுடன் அதிபர் ரணில் விக்ரமசிங்கே பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களுக்கான நில உரிமைகளை வழங்குதல், மீள்குடியேற்றம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான சட்டங்களை அமல்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் இந்தியாவில் அகதி முகாம்களில் உள்ள இலங்கையர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது என்று இலங்கை அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.