< Back
உலக செய்திகள்
பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் வாழ்த்து
உலக செய்திகள்

பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் வாழ்த்து

தினத்தந்தி
|
5 Jun 2024 1:20 AM IST

பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கொழும்பு,

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், இரவு 1 மணி நிலவரப்படி, பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில், பாஜக மற்றும் அதன் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து, பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,

தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இதயங்கனிந்த வாழ்த்துகள்! பிரதமர் மோடி மீதான இந்திய மக்களின் நம்பிக்கையை இந்த வெற்றி வெளிக்காட்டுகிறது. இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாக இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்துவதை எதிர்நோக்கியுள்ளோம் எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்