< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை மந்திரி ஜீவன் தொண்டைமான் பிறந்தநாள் வாழ்த்து
|1 March 2024 9:03 PM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துவதாக ஜீவன் தொண்டைமான் தெரிவித்துள்ளார்.
கொழும்பு,
தமிழ்நாடு முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை மந்திரி ஜீவன் தொண்டைமான் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல் ஆரோக்கியத்துடன் தொடர்ந்து மக்கள் சேவையாற்ற பிரார்த்திப்பதாகவும், தமிழக மக்களால் மட்டுமின்றி உலகத் தமிழர்களால் நேசிக்கப்படும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துவதாகவும் ஜீவன் தொண்டைமான் தெரிவித்துள்ளார்.